• Prabakaran: Oru Vazhkkai

பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அல்லது, கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். இரண்டு அணுகுமுறைகளும் அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கத் தவறுகின்றன. ஒரே ஒரு துருப்பிடித்த துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட அமைப்பு அது. ஒரு கட்டத்தில் தனியொரு அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருந்தா பிரபாகரன். காவல் துறை, நீதி மன்றம், தரைப்படை, கடற்படை, வான் படை என்று ஒரு தேசத்திடம் இருக்கவேண்டிய அனைத்தும் அவரிடம் இருந்தன. 

பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் மதிப்பீடு செய்வதற்கு முன்னால் இலங்கை இனப் பிரச்னையின் முழு வரலாறையும் புரிந்துகொள்வது அவசியம். சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இடைவிடாமல் நடந்த யுத்தத்தின் ஆணி வேர் எது? யார் தொடங்கினார்கள்? ஏன்? இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தத் தீ எரிந்துகொண்டிருக்கப்போகிறது? ராணுவ ரீதியாக மட்டும்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டுமா?  தமிழீழம் மட்டும்தான் ஒரே தீர்வா?  போரில் விளிம்பு வரை மக்களை இட்டுச் சென்று புலிகளும், பிரபாகரனும் தமிழர்களுக்கு தம்மையும் அறியாமல் தவறிழைத்து விட்டனரா?

பிரபாகரனின் வாழ்க்கை என்பது, ஒரு தனி மனித சரித்திரமல்ல, ஓர் இனத்தின் பெருங்கதை.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Prabakaran: Oru Vazhkkai

  • ₹210.00


Related Products

Prabhakaran: The Story of his struggle for Eelam (ebook)

Prabhakaran: The Story of his struggle for Eelam (ebook)

Though the Sri Lankan Tamils began the struggle for their rights in Sinhala dominated Sri Lanka well..

₹50.00