• Sakkai (ebook)

கட்டட மற்றும் சாலை கட்டுமானங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஜல்லி உடைக்கும் தொழிலே இந்த நாவலின் கதைக்களம்து.  இந்த விளிம்பு நிலை மனிதர்கள் வாழ்க்கைக்கும் வாழ்தலுக்குமான விளிம்புகளில் சாகச பயணம் செய்பவர்கள். வசதிகளற்ற வாழ்வு.. அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றிக் கொள்ளவியலாத பொருளாதாரம்.. இயற்கையின் நெளிவுசுளிவுகளுக்கேற்ப வளைந்து கொடுக்கும் போக்கு.. வெளி தொடர்புகள் அதிகமற்ற வாழ்க்கை சூழலில் இருப்பதை நிறைவாக்கி காதல்.. காமம்.. சண்டை.. கோபம்.. அன்பு.. பாசம்.. விருப்பு.. சோகம் என்ற உணர்வுகளை தங்களுக்குள் பகிர்ந்துக் கொண்டு சாகச வாழ்க்கையை சாதாரணமாக வாழ்ந்து விடுகிறார்கள் இவர்கள். இந்த கல் குவாரி தொழிலாளிகளை களமாகக் கொண்டு கிட்டத்தட்ட 50 வருட வரலாற்றை திரட்டிய கலைச்செல்வி குவாரி தொழில் நடைபெறும் இடங்களில் தன் கணவரின் துணையோடு கள ஆய்வு செய்து சேகரித்த விபரங்களை நாவலாக்கியிருக்கிறார்.

சமகால இலக்கியத்தில் கவனிக்கத் தக்க இடதுசாரி சிந்தனையுடன் கூடிய விளிம்பு நிலை மக்களைப் பற்றிய படைப்பு இது.

நேரு மெமோரியல் கல்லுாரி, புத்தினாம்பட்டியில் தமிழ் இளநிலை இலக்கிய படிப்புக்கு பாடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும் கிடைத்துள்ளது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Sakkai (ebook)

  • ₹50.00