• Marukkai

மாடுகளில் ஆண்பாலுக்கு காளை என்றும், பெண்பாலுக்கு கிடாரி என்றும் பெயர். ஆடுகளில் ஆண்பாலுக்கு கிடாய் என்றும், பெண்பாலுக்கு பிருவை என்றும் பெயர். 

குட்டி போராத வரைக்கும்தான் அதற்கு பிருவை என்று பெயர். குட்டி போட்டதும்  பிருவை ஆடாக மாறுகிறது. அதற்கு ஒரு சில பகுதிகளில் மருக்கை என்ற பெயரும் உண்டு.  

குழந்தை பெறதா பெண்ணுக்கு மலடி என்று பெயர். மலடி என்ற சொல்லை மருக்கையில் வாயிலாக பிரதிபலிக்கும் இந்த நாவல் ஜெயலட்சுமி,செல்வி,ஞானம் ஆகிய மூன்று பெண்களின் வழியாக எளிய உரைநடையில் விரிவடைகிறது.  இம்மூவரும் திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்குள்ளாக தங்களது கணவனை இழந்து விதவையானவர்கள். இதில் ஜெயலெட்சுமி மட்டுமே கருவுற்று அக்கருவைக் கலைத்துக்கொள்கிறாள். மற்ற இருவரும் கருவுறாமல் கணவனை இழந்தவர்கள். 

கிராமத்தின் அன்றாட செயல்பாடுகளுள் அரசியலும்,சாதியும், பெருங்கடவுள்களும்,கூடவே சிறுதெய்வங்களும் கலந்து கிடைப்பதை சித்தரிக்கிறது.மனித மனங்களில் தேங்கியிருக்கிற நினைவுகளும்,வேதனைகளும்,குறிப்பாக கிராமப் பெண்களின் மனதில் புதையுண்டிருக்கிற துயரத்தை மருக்கை வெளிப்படுத்துகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Marukkai

  • ₹180.00