• நள்ளிரவின் குழந்தைகள் - பாகம் 2 (ebook)

இந் நுற்றாண்டின் தலைசிறந்த நாவல்களில் முதன்மையானது என கருதப்படும் நள்ளிரவின் குழந்தைகள் 1993 ல்"புக்கர்களின் புக்கர்" என்ற விருதை -- அதாவது தனது இருபத்தைந்து ஆண்டுகளில் புக்கர் பரிசு வென்ற நாவல்களில் மிக சிறந்தது என்ற தகுதியை பெற்றது.. இந்தியா மிகப் பெரிய நாவலாசிரியரை உருவாக்கியிருக்கிறது... இடையறாது கதை சொல்வதில் தேர்ந்தவர். - வி.எஸ். ப்ரீட்செட், நியூ யார்க்கர் 1947 ஆகஸ்டு 15 அன்று சரியாக நள்ளிரவில் - இந்தியாவின் சுதந்திரமடைந்த துல்லியமான கணத்தில் - பிறந்த குழந்தையான சலீம் சினாய் பத்திரிகைகளால் கொண்டாடப்படுகிறான். பிரதமர் நேருவினால் வரவேற்கப்படுகிறான். ஆனால் பிறப்பினால் விளைந்த இந்த ஒருங்கிணைவு, சலீம் ஏற்கத் தயாராயில்லாத பல விளைவுகளைக் கொண்டிருக்கிறது. அவனுடைய தொலைவிலுணரும் சக்தி ஆயிரம் ‘நள்ளிரவின் குழந்தைகளோடு’ தொடர்புறுத்துகிறது. அவர்கள் எல்லோருமே இந்தியா சுதந்திரமடைந்த முதல் மணியில் பிறந்தவர்கள். மற்றவர்களால் உணர இயலாத அபாயங்களை மோப்பத்தினால் உணரும் விசித்திரமான முகர்திறனையும் அளிக்கிறது. தன் தேசத்தோடு பிரிக்கவியலாத தொடர்பினைக் கொண்ட சலீமின் தன்வரலாறு, நவீன இந்தியா தனது மிகச் சாத்தியமற்ற, மிகப் புகழ்வாய்ந்த பாதையில் எதிர்கொண்ட பேரிடர்களையும் வெற்றிகளையும் உள்ளடக்கும் சுழற்காற்று. இந்தத் தலைமுறையில் ஆங்கிலம்பேசும் உலகிலிருந்து வெளிவந்த மிகமுக்கியமான நூல்களில் ஒன்று. - நியூ யார்க் ரிவியூ ஆஃப் புக்ஸ் பாரிய, உயிர்த்துடிப்புள்ள, கவனத்தை ஈர்க்கின்ற... எல்லா அர்த்தங்களிலும் ஒரு மிகச்சிறந்த நூல். - சண்டே டைம்ஸ் ஓர் அற்புதமான புத்தகம். சல்மான் ருஷ்தீ ஒரு முக்கியமான நாவலாசிரியர் - அப்செர்வர் இந்தியாவின் இலக்கிய வரைபடத்தை மாற்றிவரைந்தாக வேண்டும்... தன் குரலைத் தேடும் ஒரு கண்டத்தைப் போல நள்ளிரவின் குழந்தைகள் ஒலிக்கிறது. - நியூ யார்க் டைம்ஸ்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நள்ளிரவின் குழந்தைகள் - பாகம் 2 (ebook)

  • ₹60.00


Related Products

நள்ளிரவின் குழந்தைகள் - பாகம் 1 (ebook)

நள்ளிரவின் குழந்தைகள் - பாகம் 1 (ebook)

இந் நுற்றாண்டின் தலைசிறந்த நாவல்களில் முதன்மையானது என கருதப்படும் நள்ளிரவின் குழந்தைகள் 1993 ல்"புக்..

₹50.00