• மயில் கெண்டையின் எழுதப்படாத வரலாறு (ebook)

அறிவுஜீவித்தனம் என தனியாக எதுவும் துருத்திக்கொண்டு தெரியாமல் ஒரு சாமானியன் உலகைக் காணும் பார்வையோடு அணுகுகின்றன செல்லமுத்து குப்புசாமியின் இந்த சிறுகதைகள். ஒவ்வொரு கதையை வாசித்து முடிக்கும் போதும் ‘அட ஆமாம்ல’ என்ற நினைப்பு வந்து போகிறது. நாம் கடந்து வரும் அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்துப் பார்க்கிற அல்லது பார்த்த அனுபவத்தை நமக்கு உருவாக்குகின்றன. 

ஆன்சைட் வாழ்க்கை, அபார்ட்மெண்ட் வாழ்க்கை, ஆணின் மனோபாவத்தோடு உலகைக் காணும் வாழ்க்கை, பேச்சிலர் வாழ்க்கை, நகர வாழ்க்கை, கிராம வாழ்க்கை, நகரத்துக்கு கிராமத்துக்கும் இடையே மனதளவில் தத்தளிக்கும் திரிசங்கு வாழ்க்கை, குழந்தைகள் உலகம், முதியவர்களின் லைஃப் ஸ்டைல் என எல்லாத் தளங்களிலும் பயணிக்கிறது இந்த சிறுகதைத் தொகுப்பு. இதில் ஏதேனும் ஒரு சிறுகதையாவது நம்மோடு தனிப்பட்ட முறையில் பொருத்திப் பார்க்க முடியும். அதனோடு சேர்ந்து பயணப்பட முடியும். 

தொகுப்பு நெடுகிலும் மெலிதாக இழையோடும் நகைச்சுவை உணர்வும், பாசாங்கற்ற அலுப்பூட்டாத இலகுவான மொழியும் ’மயில் கெண்டையின் எழுதப்படாத வரலாறு’ சிறுகதைத் தொகுப்பினை தனித்தன்மை வாய்ந்த புத்தகமாக மாற்றுகிறது. 

தொகுப்பிலிருந்து சில வரிகள்:

* நெருக்கமானோம். ஈர முத்தங்களை பரிசளித்துக் கொண்டோம். மென்மையான தழுவல்களை ஒத்திகை பார்த்தோம். யாருமற்ற சாலையில் நீண்ட நேரம் பயணித்தோம் - நண்பர்களாகவே.

* டிராஃபிக்கில் ஆம்புலன்ஸ் பின்னால் செல்வதும், டோல் கேட்டில் அரசுப் பேருந்து பின்னால் செல்வதும் எத்தனை பெரிய மேனேஜ்மெண்ட் கான்செஃப்ட் என அன்றைக்கு நான் வியந்து போனேன்.

* ஞாயிற்றுக் கிழமை மதியச் சாப்பாட்டுக்கு மட்டனா, சிக்கனா, மீனா என்பதே வாரக் கடைசியின் ஆகப் பெரிய பிரச்சினையாகக் கருதி விவாதிக்கும் குடும்பங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்வதில்லை.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மயில் கெண்டையின் எழுதப்படாத வரலாறு (ebook)

  • ₹50.00