• எட்றா வண்டியெ (ebook)

இரண்டு முறை சாகித்ய அகடாமி விருது வாங்கியவர்...... மூன்று முறை ஞானபீடம்  இவரது வீடு தேடி வந்தது. தமிழக அரசு அளித்த சிறந்த நாவலுக்கான விருதினைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டிருக்கிறார் இவர்.....என்றெல்லாம் மரபான வரிகளுக்குள் புதைத்து விட  முடியாது நம் வா.மு.கோமுவை.

சுருக்கமாக சொன்னால் குசும்பின் சிகரம், கொங்கு வட்டாரத்திற்கே உரிய எகத்தாளமும் எள்ளலும் இவரது எழுத்தில் துள்ளி விளையாடும். பொதுவாக முன்னுரையோ ....பின்னுரையோ ....இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி ஒப்பேத்துவதுதான்... ஆனால் அந்த ஒப்பனைகள் அவசியமற்ற எழுத்து வா.மு.கோமுவுக்கு.

"என் இனிய தமிழ் மக்களே!" என்கிற அழைப்போடு  வந்த படைப்புகள் கிராமங்களில் ஒரு புறத்தை சொல்லியது என்றால், இன்னும் சொல்லப்படாத சேதிகளை... சொல்லப்படாத பக்கங்களை...சொல்லப்படாத எளிய மனிதர்களைச் சுமந்து வருகிறது இவரது எழுத்து.

இது மண்வாசனையின் மறு பக்கம்.

- பாமரன்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

எட்றா வண்டியெ (ebook)

  • ₹50.00