Vijay Mahindran

Vijay Mahindran

விஜய் மகேந்திரன், 1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு “இருள் விலகும் கதைகள்” என்ற நூலின் தொகுப்பாசிரியர். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வந்தவர் தற்போது ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில் தி.நகரில் வசித்து வருகிறார். நகரத்திற்கு வெளியே இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. 2011 ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை சிறந்த சிறுகதைத் தொகுப்புக்காக “நகரத்திற்கு வெளியே” பெற்றுள்ளது.

இந்த தொகுப்பிலுள்ள சில கதைகள் உயிர் எழுத்து கதைகள், சிக்கிமுக்கி கதைகள், மதுரை சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளது.

இவரது முதல் நாவல் “ஊடுருவல்” மற்றும் அடுத்த சிறுகதை தொகுப்பான “கிளாப் போர்டு” என இரண்டு புத்தகங்கள் விரைவில் வெளிவர இருக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து இவர் மின்னம்பலம்.காமில் எழுதி வரும் தொடரும் பரவலான கவனத்தை பெற்றுள்ளது.


Product Compare (0)


நகரத்திற்கு வெளியே (ebook)

நகரத்திற்கு வெளியே (ebook)

இவரின் எழுத்து என்னை கவர்கிறது. பம்மாத்தற, கோணங்கித்தனமற்ற, கணக்கு வழக்கு வித்தையில்லாத, வெற்று ஆரவா..

₹55.00 ₹80.00

Showing 1 to 1 of 1 (1 Pages)