• Kottu Mozhakku (ebook)

கார்ப்பரேட் வாழ்க்கையில் அழுத்தங்களில் மூச்சுத் திணறி நகரத்தில் காலம் தள்ளும் ஒருவன் தன் சொந்த மண்ணில் சந்திக்கிற மரணத்தினையும், அதனையடுத்த நிகழ்வுகளையும் பாசாங்கில்லாமல் படம் பிடிக்கிறது. மரணத்தினை சுற்றிய மன உணர்வுகள், கொண்டாட்டங்கள், அரசியல்கள், உறவுகளுக்குள் தீர்க்கப்படாத வன்மம், சடங்குகளில் பேணப்படும் தொன்மம், எளிய மனிதர்களின் பெருந்தன்மை, நகைச்சுவை உணர்வு, கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, கெட்ட வார்த்தைகள், ’கெட்ட’ ஜோக்குகள், சாதிகளின் பின்னுள்ள அரசியல், அரசியலின் பின்னுள்ள சாதி என பல தளங்களை போகிற போக்கில் தொட்டுச் செல்லும் ஜீவனுள்ள கதை.

 செல்லமுத்து குப்புசாமியின் முந்தைய நாவலில் முழுக்க முழுக்க நகரம் சார்ந்த கதையைக் கொடுத்திருப்பார். இல்லையேல் கிராமத்துக் கதையைக் கொடுத்திருப்பார். இது கிராமமும், நகரமும் கலந்த கதை. கறந்த பாலினைப் போல கலப்பில்லாத கிராமத்து மொழியும், துரித உணவினைப் போன்ற விறுவிறுப்பான பெருநகரத்தின் மொழியும் இணைந்த மொழியின் தாளம் போடுகிறது கொட்டு மொழக்கு. இவரால் எதனையும் கேள்விக்கு உள்ளாக்க முடிகிறது. எதையும் எள்ளி நகையாட முடிகிறது. கதையும், சொல்லாடலும் நம்மை சந்தைப் பொருளாதாரத்தின் நாவுகள் இன்னும் முழுமையாக நீண்டிடாத கிராமத்து வாழ்வுக்கு இட்டுச் செல்கிறது.

நாவலில் வரிகளில் இருந்து:

மரணங்களை மனிதன் கொண்டாடத் துவங்கியது ஒரு விநோதம். துக்க வீடென்பது பேருக்குத்தான். வீட்டில் உள்ளவர்களுக்குத்தான் துக்கம். செத்தவனுக்கு என்ன துக்கம்! அவனுக்கு அது விடுதலை. அந்த விடுதலைக்கான கொண்டாட்டம் மனித நாகரீக வளர்ச்சியில் கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சம். ”நீ செத்தா கொட்டு மொழக்குப் போடாமக் கொண்டு போய்ப் பொதச்சுப் போட்டு வாரனா இல்லையான்னு பாரு” என கோபத்தில் ஒரு சில மகன்கள் பேசுவதைக் கூட ராசு சின்ன வயசில் கேட்டிருக்கிறான். கொட்டு மொழக்கி சந்தோசமாக ஒரு மனிதனுக்கு விடை கொடுப்பது அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கான ஒப்பில்லாத அங்கீகாரம். அவனைச் சுற்றியிருப்பவர்கள் அவனுக்கான நன்றியை இப்படித்தான் செலுத்தியாக வேண்டும். செத்த பிறகு அவனுக்கென்ன கூலிங் கிளாஸா போட்டு சந்தோசப்படுத்திப் பார்க்க முடியும்!

 மனிதன் தன்னால் கெட்டவனாக உருவகப்படுத்தப்பட்ட நரகாசுரனின் மரணத்தையும் கொண்டாடுகிறான். நல்லவனாக உருவகம் செய்யப்பட்ட மகாபலியின் மரணத்தையும் கொண்டாடுகிறான். இதில் என்ன அரசியல் என்று ராசு குழம்பியிருக்கிறான். கேரளாவில் ஏன் தீபாவளி கொண்டாடுவதில்லை? கேரளத்துப் பெண் குட்டிகள் ஏன் காலில் மெட்டி அணிவதில்லை? இதில் எதோ ஒரு தத்துவார்த்தம் இருக்கிறது. கற்றுக்கொள்ள எதோ ஒரு படிப்பினை இருக்கிறது. கேராளாவில் மனிதர்கள் செத்தால் கொட்டு மொழக்குப் போடுவார்களா என்ற கேள்வி ஆவனுக்குள் பல காலமாகத் தீர்க்கப்படமாலேயே கிடக்கிறது. இல்லை இல்லை! அங்கே பறையோசையெல்லாம் அடிக்க மாட்டார்கள். கெண்டைதான் அடிப்பார்கள்!

 இப்போதெல்லாம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் செண்டை ஆட்டக்காரர்களை அடிக்கடி கூட்டி வருகிறார்கள். பணக்கார வீட்டுப் பன்னிக்குட்டிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் லீவுக்கு துபாயும் போகலாம், ஹவாயும் போகலாம். தப்பட்டைக்குப் பதில் செண்டை மேளம் அடிக்கலாம். எங்கு போனாலும் அதுதான் இப்போது. கல்யாணம், காதுகுத்து, கிடாய் வெட்டு, கட்சிக் கூட்டம் என எல்லா இடத்திலும் காது ஜவ்வு கிழிகிறது.

 தப்பட்டை அடிப்பவனைத் தான் ஊரை விட்டுத் தள்ளி வைத்து விட்டோம். அவன் கலையைக் கூடவா?

Format
Format தங்களது தனிப்பட்ட pdf பிரதி / Your personalised pdf copy

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Kottu Mozhakku (ebook)

  • ₹50.00