• 57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்

வா.மு.கோமுவின் தனித்தன்மையே அவர் ஸ்நேகிதிகளைப் பற்றி துல்லியமாக, ரசிக்கும்படி எழுதுவதுதான். அதிலும் குறிப்பாக நகரமயமாக்கலின் தாக்கங்கள் தீண்டி விட்ட கிராமத்து ஸ்நேகிதிகளைப் பற்றி. முக்கால்வாசி கிராமங்கள் தங்களின் அப்பாவித்தனத்தை இழந்து விட்டன. நகரமயமாகிக் கொண்டிருக்கும் கிராமத்தார்களின் சிக்கல்கள் நகரத்திலிருப்பவர்களின் சிக்கல்களைவிடவும் புதிரானவை. சிக்கலானவை. சுவாரசியமானவை. இந்தச் சிக்கல்களும் புதிர்களும்தான் வா.மு.கோமுவிற்கு களம் அமைத்துக் கொடுக்கிறது.

இந்த நாவலின் ஒரு டிராக் நம்மை டவுசர் போட்ட காலத்துக்கு இழுத்துச் செல்லும். ஒன்னொரு டிராக் உறங்கிக் கொண்டிருக்கும் ஹார்மோன்களை உசுப்பி விடும்.

இப்போதெல்லாம் வாசிப்பது போரடிக்கிறது அதனால் டிவி பார்கிறோம் என்பவர்கள் கோமுவின் எழுத்துக்களில் இருந்து ஆரம்பிக்கலாம். வாசிப்பு எத்தனை ரம்மியமானது என்று புரியும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்

  • ₹50.00